நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க திட்டங்கள் தயார் - டில்வின் சில்வா அதிரடி அறிவிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு எவரிடமும் தீர்வுகள் இல்லாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தியிடம் தீர்வுகள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டு சில மாதங்களிலேயே தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வது சாத்தியம் எனவும் அதற்கான வேலைத்திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எமது அரசை மக்கள் நம்புவார்கள்
தேசிய மக்கள் படை அரசாங்கத்தை அமைத்தவுடன் அந்த அரசை மக்கள் நம்புவார்கள் என்றும் அதன் பின்னர் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவார்கள் என்றும் அதன் மூலம் நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
250 மில்லியன் டொலர்கள் சேமிக்கப்படும்
அவர் மேலும் கூறுகையில், தனது அரசாங்கத்தின் கீழ், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாதத்திற்கு சுமார் 700 மில்லியன் டொலர்களை அனுப்புவார்கள், எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்கிய பிறகு, மேலும் 250 மில்லியன் டொலர்கள் சேமிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
