காந்தி தேசத்தின் அநீதியால் பலியான சாந்தனுக்கு இறுதி வணக்கங்கள்!

Tamils Rajiv Gandhi Sri Lanka India Death
By Shadhu Shanker Mar 03, 2024 09:23 AM GMT
Report

காந்தி தேசத்தின் அநீதியால் பலியான சாந்தனுக்கு எமது இறுதி வணக்கங்கள்  என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த தாயக மண்ணில் காலடி பதிக்க ஆவலுடன் காத்திருந்த சாந்தனின் திடீர் மரணச்செய்தி கேட்டு ஆறாத்துயரும் மனவேதனையும் அடைந்தோம்.

பல வருட காத்திருப்பின் மகனை காண ஆவலாக காத்திருந்த தாயாரின் ஆற்ற முடியா துயரத்திலும், உறவுகளின் வேதனையிலும் நாமும் பங்கு கொள்கிறோம்.

கண்ணீருடன் சாந்தனை வரவேற்ற கிளிநொச்சி

கண்ணீருடன் சாந்தனை வரவேற்ற கிளிநொச்சி

காந்தி தேசத்தின் அநீதி

சாந்தன் அவர்கள் அநீதியான நீதி பொறிமுறையால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 33 வருடங்கள் தொடர்ச்சியாக சிறை கொடுமையை அனுபவித்த பின், உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட ஒரு ஆண்டுக்கு மேலாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டமை கொடுமையின் உச்சம்.

காந்தி தேசத்தின் அநீதியால் பலியான சாந்தனுக்கு இறுதி வணக்கங்கள்! | Our Last Salutations To Chandan Death Jaffna Tamil

இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே அவமதிக்கும் செயலாகும். இந்திய வல்லாதிக்கத்தினால் ஈழத்தமிழர் மீது தொடர்ந்தும் நடாத்தப்படும் இவ்வன்செயலைக் கண்டிப்பதுடன், இந்த "சிறப்பு முகாம்கள்" மூடப்பட்டு தொடர்ந்தும் அரசியல் கைதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்கள் சுதந்திரத்தினை அனுபவிக்க வழி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக இதே வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அவர்களின் உறவுகளுடன் சேர்ந்து தமது மிகுதி வாழ்நாளை கழிக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை மறித்த காவல்துறையினர்

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை மறித்த காவல்துறையினர்

மீளா துயில் கொண்ட சாந்தன்

தாயக கனவுடன் மீளா துயில் கொண்ட சாந்தனுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தனது இறுதி வணக்கங்களை செலுத்துவதுடன் இன்று நடைபெறவுள்ள அன்னாரின் இறுதி பயணத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு எமது தேசத்தின் உணர்வு நிலையை வெளிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

காந்தி தேசத்தின் அநீதியால் பலியான சாந்தனுக்கு இறுதி வணக்கங்கள்! | Our Last Salutations To Chandan Death Jaffna Tamil

எமது தேசத்தின் விடுதலைக்காய் தொடர்ந்தும் போராடுவோம் என உறுதி எடுத்து கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021