கண்ணீருடன் சாந்தனை வரவேற்ற கிளிநொச்சி
சாந்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும் நிலையில் சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ஏ9 வீதியில் மக்கள் ஊர்வலமாக சாந்தனின் உடல் ஊர்தியில் அஞ்சலி மண்டபம் வரை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அஞ்சலிக்காக உடல் டிப்போ சந்தியில் அமைக்கப்பட்ட அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து மூத்த போராளி காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார்.பின்னர் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அஞ்சலி செலுத்தினார்.
உணர்வுபூர்வ அஞ்சலி!
தொடர்ந்து, முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து தேசிய உணர்வுக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. சாந்தனின் பூதவுடலுக்கு வவுனியா உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்