ஈழத் தமிழருக்கு இந்தியாவில் கூட பாதுகாப்பு இல்லை! வலுக்கும் எதிர்ப்புகள்

Missing Persons Sri Lankan Tamils Sri Lanka India
By Sathangani Mar 03, 2024 07:10 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

ஈழத் தமிழருக்கு இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவில் கூட பாதுகாப்பு இல்லை என்பதனை சாந்தனின் மறைவு எடுத்துக்காட்டுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் நேற்று (02) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இந்திய வல்லாதிக்கத்தால் பலியெடுக்கப்பட்ட இன்னொரு ஈழத்தமிழனுக்கு எமது இறுதி வணக்கங்கள்.

இந்தியாவுடன் இலங்கை: கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டங்கள்

இந்தியாவுடன் இலங்கை: கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டங்கள்

இந்திய அரசின் சதி

தியாக தீபம் திலீபன், தளபதி கிட்டு போன்ற வீரமறவர்கள் இந்திய அரசின் சதியினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டது போலவே தமிழ் மண்ணை நேசித்த தமிழ் உணர்வாளன் சாந்தன் என்கின்ற தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்பவரும் இந்திய அரசின் சதி வேலை காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஈழத் தமிழருக்கு இந்தியாவில் கூட பாதுகாப்பு இல்லை! வலுக்கும் எதிர்ப்புகள் | Eelam Tamils Are Not Safe In Sl And India

இப்படியான நிகழ்வுகள் ஈழத் தமிழருக்கு இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவில் கூட பாதுகாப்பு இல்லை என்பதை வெளிக்காட்டுகின்றது.

மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் அரசு நயவஞ்சகத்துடன் இரட்டை வேடம் போட்டு இவரைக் கொன்றிருக்கிறது.

செங்கடலை நோக்கி இலங்கையின் அடுத்த நகர்வு

செங்கடலை நோக்கி இலங்கையின் அடுத்த நகர்வு

33 வருடங்களாக சிறையில்

தான் சம்பந்தப்படாத குற்றத்திக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின் 33 வருடங்களாக சிறையில் வாடிய பின், உச்சநீதி மன்றம் விடுதலை செய்த பின்னரும் உயிருடன் சொந்த மண்ணிற்கு அனுப்பாமல் இரக்கமற்ற ஈனச்செயல் புரிந்த இந்திய அரசிற்கு, இலங்கை அரசின் துரோகத்தனத்தால் எம் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு இன்றும் நீதியற்று கண்ணீருடன் வாழும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

ஈழத் தமிழருக்கு இந்தியாவில் கூட பாதுகாப்பு இல்லை! வலுக்கும் எதிர்ப்புகள் | Eelam Tamils Are Not Safe In Sl And India

தாய் மண்ணையும், தாயாரையும் காணும் ஏகத்துடனேயே இவ்வுலகை விட்டு பிரிந்த சாந்தனுக்கு எமது கண்ணீர் அஞ்சலியினை செலுத்துவதுடன் அன்னாரின் தயாரின் துயரிலும் அவரது குடும்ப உறவுகளின் துயரிலும் தாய்மார்களாகிய நாங்களும் பங்கு கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்டபிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...!

உள்ளூராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026