நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்!
இலங்கையில் நடப்பாண்டில் இதுவரை ஏற்பட்ட வீதி விபத்துகளில் 2,100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் தினமும் சராசரியாக ஏழு முதல் எட்டு பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கவனக்குறைவு
மேலும் தெரிவித்த அவர், வாகனம் ஓட்டும் போது ஏற்படும் சிறு கவனக்குறைவு, அதிக வேகம் அல்லது தவறான முடிவு, ஒரு குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரத்தை இழக்கச் செய்யக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அதிக வேகம் மற்றும் அபாயகரமான முறையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், போக்குவரத்து விதிகள் மற்றும் சமிக்ஞைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலைக்கவசத்தையும் (Helmet), ஏனைய வாகனங்களில் பயணிப்போர் ஆசனப் பட்டியையும் (Seat belt) கட்டாயம் அணிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வாகனச் சாரதிகள் பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் வாகனங்களைச் செலுத்துமாறும் அவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |