மே 9 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 2,393 சந்தேகநபர்கள் கைது
மே 9 வன்முறைச் சம்பவங்கள்
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற 856 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 2,393 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று 45 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் 18 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியல்
அதன்படி, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,055 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல பிரிவுகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.