இஸ்ரேலினால் திட்டமிட்டு கொல்லப்படும் ஊடகவியலாளர்கள் : வலுக்கும் எதிர்ப்பு!
காசாவிலுள்ள பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் சமர் அபுதாகா என்ற ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்ட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொலையினை வெளிநாட்டு ஊடகங்கள் வன்மையாகக் கண்டித்து வரும் நிலையில், இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், ஊடகவியலாளர்களை மாத்திரமல்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் திட்டமிட்டு இலக்கு வைத்து கொலை செய்வதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
காசாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்
இந்நிலையில், சமீர் அபுதாகாவின் கொலையுடன் சேர்த்து காசாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் படுகொலைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இஸ்ரேலிய அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பொறுப்புக்கூற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகம் மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |