நாட்டில் நிலவும் கடும் வறட்சி : பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகப் பணிகள்
மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்த மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் விநியோகப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனர்த்தத்திற்கு உள்ளான 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |