ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்கள்! துணை ஜனாதிபதி வான்ஸின் அறிவிப்பு
இனிவரும் காலங்களில் ஈரானுக்கு எதிராக பொருளாதார, இராணுவ, இராஜதந்திர மற்றும் மறைமுக அழுத்தங்கள் உட்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணைியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தெஹ்ரான் நிறுத்தாத வரை, ஈரானுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த அமெரிக்கா திட்டமிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
போரின் முடிவு
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து ஈரானிடமே கேட்க வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.

Image Credit: BBC
மேலும், ஈரானியர்கள் நாளுக்கு நாள் தங்களது இராணுவ மற்றும் தற்காப்புத் திறன்களை இழந்து வருவதாகக் குறிப்பிட்ட வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போது முற்றிலுமாக இல்லாமல் போயுள்ளதை அவர்களும் உணர்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம்
மூன்று மாதங்களுக்கு முன்பு ஈரானின் அச்சுறுத்தல்களால் அந்த நீரிணை வழியிலான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கிட்டத்தட்ட முடங்கியிருந்த போதிலும், தற்போது அது மோதல் தொடங்குவதற்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image Credit: thedailyaus
எனவே, வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் செயல்படுமாறு ஈரானுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |