ரணிலின் பட்ஜட் : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு
அதிபர் ரணில் சமர்ப்பித்த அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை என்றும், 'சரியாகச் செய்தால்' அடிமட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் அதிபரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், வரவு செலவுத் திட்டத்தில் சில 'கெட்ட' விடயங்கள் இருப்பதால், 'நல்ல விடயங்களுக்கு' ஆதரவளிக்கப்படும் என, பத்தரமுல்ல. நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார்.
அதிகாரத்தை வழங்கியவர்கள் நாங்கள்தான்
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியபோது, “பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், அதற்கான அதிகாரத்தை வழங்கியவர்கள் நாங்கள்தான்” என்றார்.
பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டை டிசம்பர் 15ஆம் திகதி நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதுடன், இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மத்தியில் இடம்பெற்றுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா
