அரசின் மற்றுமொரு வரி விதிப்பு- வெளியானது தகவல்
இலங்கையில் முன்னணி அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கியவர்களுக்கு வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தத் தீர்மானத்தின்படி, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.என்.ஏ. விஜேசூரிய அண்மையில் வீட்டு வளாக நிர்வாக நிறுவனங்களுக்கு இந்த தகவலை எழுத்து மூலம் அறிவித்தார்.
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வரி வருவாய்
நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வரி வருவாய் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், வீடுகளை வாங்கி தற்போது அந்த வீட்டு வளாகங்களில் வசிக்கும் அனைத்து நபர்களையும் பற்றிய தகவல்களை வழங்குமாறு உள்நாட்டு வருவாய் ஆணையாளரின் எழுத்துபூர்வ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 123(1) பிரிவின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த எழுத்துபூர்வ கோரிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.