வெளியாகிய இம்ரான் கானின் ஆபாச ஒலிப்பதிவு - தான் பிளே பாய் என ஒத்துக்கொண்டார்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில பெண்களுடன் பேசும் ஒலிப்பதிவு என்று கூறி சில ஒலிப்பதிவுகள் வெளியாகிப் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இது தொடர்பாக அவரே சில அதிர்ச்சிமிக்க கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இருப்பினும், கடந்தாண்டு கூட்டணிக் கட்சிகளே அவருக்கு எதிராகத் திரும்பியதால் பெரும்பான்மையை இழக்கும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார்.
அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பிரசாரம்
இப்போது அங்கு ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். இருப்பினும், இம்ரான் கான் அந்நாட்டு அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்.
மேலும், வெளிநாட்டுச் சதி காரணமாகவே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் இம்ரான் கான் தொடர்ந்து கூறி வந்தார். அங்கு தற்போது அமைந்துள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
இதற்காக அங்கு நாடு முழுவதும் பயணித்தும் அவர் பிரசாரம் செய்து வந்தார். அப்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாகாணத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போது தான், யாரும் எதிர்பாராத விதமாக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதனால் அவருக்குக் காலில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்ட நிலையில், அதில் இருந்து குணமடைந்தார்.
ஒலிப்பதிவுகள்
இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில பெண்களுடன் பேசும் ஒலிப்பதிவு என்று கூறி சில ஒலிப்பதிவுகள் வெளியாகிப் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவரே இப்போது விளக்கமளித்துள்ளார். லாகூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"நான் பதவியில் இருந்து நீக்கப்படும் முன்பு, ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா ஒரு முறை சந்தித்தேன். அப்போது அவர் என்னை 'ப்ளே பாய்' என்று அழைத்திருந்தார்.
நான் ஒரு பிளேபாய்
கடந்த ஒகஸ்ட் 2022ஆம் ஆண்டு ஜெனரல் பஜ்வாவை சந்தித்தேன். அப்போது எனது கட்சியை சேர்ந்த சிலரின் ஒளிப்பதிவுகள் மற்றும் காணொளிகள் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், என்னை ஒரு 'ப்ளேபாய்' என்றும் அவர் கூறினார். நான் அவரிடம் சொன்னேன். ஆம், நான் ஒரு பிளேபாய் தான். ஆனால், அது கடந்த காலத்தில்.
நான் பதவியில் இருந்து நீக்கப்பட பஜ்வாவும் ஒரு முக்கிய காரணம். அவர் திட்டமிட்டு என்னை ஏமாற்றிவிட்டார். என்னிடம் அவர் நல்லவன் போலவே நடித்தார். ஆனால், மறுபுறம் ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.
விரைவில் கானின் காணொளி
பஜ்வா என் முதுகில் குத்தினார். இப்போது பாகிஸ்தானில் தேர்தல் நடத்தப்பட்டால் நான் வென்று பிரதமராவது உறுதி. இதை அனைவருக்கும் தெரியும். இதைத் தடுக்கவே இராணுவத்தில் பாஜ்வா ஒரு திட்டம் செய்துள்ளார்.
நான் பிரதமராகக் கூடாது என்பதில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.என தெரிவித்தார். இம்ரான் கான் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் அவர் பெண்களுடன் பேசுவதைப் போன்ற மூன்று ஒலிப்பதிவுகள் வெளியாகிப் பரபரப்பைக் ஏற்படுத்தியது . அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, இந்த ஒலிப்பதிவுகள் உண்மையானவை என்றும் விரைவில் கானின் காணொளி வெளியாகலாம் என்றும் கூறினார்.
#Kubrakhan @soldierspeaks didn’t mention her or anyone else’s name or initials non of you were this agitated when fake audios ,Videos were leaked of Imran khan,his wife & Azam Sawati . Shameless , selected media campaign against #KM to mislead & take attention away fm real issue
— Mahnaz Ahsan (@AhsanMahnaz) January 2, 2023
இந்தச் சூழலில் இம்ரான் கானே தான் பிளே பாய் எனக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
