பாகிஸ்தானில் உருப்பெறும் மதக்கலவரம் - 100க்கும் மேற்பட்டோர் கைது!
பாகிஸ்தானின் ஜரன்வாலா பகுதியிலுள்ள தேவாலயங்கள் மீது தீ வைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள், பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் காணப்படுகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து, அப்பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.
மர்ம கும்பல்

அதுமாத்திரமல்லாமல் தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பஞ்சாப் மாகாண உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதற்காக காவல் துறையினர் அந்த இடங்களிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.