பிரபல விக்கிப்பீடியா தளத்தை முடக்கியது பாகிஸ்தான்
Pakistan
By Sumithiran
இஸ்லாமிய மதம் குறித்த கருத்துகளை பிரபல விக்கிப்பீடியா தளம் நீக்காததால் அந்த தளத்தையே பாகிஸ்தான் முடக்கியுள்ளது.
அண்மையில் விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுள் குறித்து சர்ச்சை மற்றும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கருத்துகளை 48 மணி நேரத்திற்குள் விக்கிப்பீடியா நிறுவனம் நீக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.
இஸ்லாமிய மதம் குறித்த அவதூறு கருத்து
ஆனால் விக்கிப்பீடியா தளம் அந்த தகவல்கள் எதையும் நீக்கவில்லை. இதனால் இஸ்லாமிய மதம் குறித்த அவதூறு கருத்துகளை வெளியிடுவதாக விக்கிப்பீடியா தளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கப்பட்டால் மட்டுமே விக்கிப்பீடியாவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்