ஈரானின் பாரிய திட்டத்திற்கு தடையாக வந்த அமெரிக்கா..!
ஈரானின் அனுசக்தி திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தமையினால் ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் பொருத்தப்பட்டு வந்த எரிவாயு குழாய் திட்டமானது இடையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அண்டை நாடான ஈரானில் இருந்து மலிவான விலையில் எரிவாயு இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்தது. இந்நிலையில், இது தொடர்பான ஒப்பந்தத்தில் கடந்த 2009 இல் ஈரான் மற்றும் பாகிஸ்தான் கையெழுத்திட்டன.
குறித்த இந்த ஒப்பந்தமானது முதலில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஈரான் எரிவாயு குழாய் திட்டம் என கருதப்பட்டாலும் இந்தியா அதனை கைவிட்டதால் ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு திட்டமாக மாறியது.
பொருளாதார தடை
இதற்காக 1150 கிலோ மீட்டர் நீளமுள்ள எரிவாயு குழாயானது ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் பொருத்தப்பட்டு வந்தது.
ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா கடந்த ஆண்டு பொருளாதார தடை விதித்தமையினால் பாகிஸ்தான் இந்த திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டது.
இதனால் தற்போது அமெரிக்காவின் பொருளாதார தடையில் இருந்து விலக்கு பெற முடிவு செய்திருப்பதாக பாகிஸ்தான் பெட்ரோலிய துறை மந்திரி முசாதிக் மாலிக் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |