பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்தில் பதுங்கியுள்ள முக்கிய பயங்கரவாதிகள் : இந்தியா தகவல்
பாகிஸ்தானில் உள்ள மூன்று முக்கிய பயங்கரவாதிகள் அந்நாட்டு இராணுவ தலைமையிடத்தில் பதுங்கி கொள்ள பாகிஸ்தான் இராணுவம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பயங்கரவாதத்தின் மூன்று பெரிய முகங்களான மசூத் அசார்(ஜெய்சி இ முகம்மது ), ஹபீஸ் சயீத் (ஜமாத் உத்தவா) , சையத் சலாவுதீன் உட்பட பல பெரிய பயங்கரவாத தளபதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் நான்கு வெவ்வேறு தலைமையகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கொமாண்டோக்கள் பாதுகாப்பு
இந்திய உளவுத்துறை வட்டாரங்களின்படி, மேற்கூறிய 3 பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் இராணுவத்தின் லாகூரில் உள்ள 4வது படைப்பிரிவு, கராச்சியில் உள்ள 5வது படைப்பிரிவு, ராவல்பிண்டியில் உள்ள 10வது படைப்பிரிவு, பெஷாவரில் உள்ள 11வது படைப்பிரிவு தலைமையகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தலைவர்களின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் கொமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைக்கு, பொது மக்களும் அவர்களை சந்திப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
