இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானுக்குள் விழுந்ததால் பரபரப்பு
india
attack
pakistan
missle
By Sumithiran
இந்தியாவால் பரிசோதனை நடத்தப்பட்ட சுப்பர் சொனிக் ஏவுகணை தங்கள் எல்லைக்குள் வந்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், ஹரியானா மாநிலம் சிறுசா நகரில் இந்தியா சோதனை செய்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் மியா சானு என்ற பகுதியில் விழுந்து தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக இதனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து இந்தியா விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து இந்திய தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி