பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

Dinesh Gunawardena Prime minister Sri Lanka Pakistan
By Sathangani Dec 19, 2023 05:41 AM GMT
Report

சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (18) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன் போது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பாக பௌத்த யாத்ரீகர்களின் பாகிஸ்தானுக்கான விஜயங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் விளக்கினார்.

இலங்கையர்களுக்கு பௌத்த யாத்திரை தலங்களை திறக்கும் பாகிஸ்தானின் முன்மொழிவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

அடையாள அட்டைக்கான புகைப்படக் கட்டணம் அதிகரிப்பு

அடையாள அட்டைக்கான புகைப்படக் கட்டணம் அதிகரிப்பு


நன்றி தெரிவித்த பிரதமர்

இதேவேளை கடந்த ஆண்டு பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்கள் பாதுகாக்கப்பட்ட பௌத்த பாரம்பரியங்களை பார்வையிடுவதற்காக ஒரு சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்ததற்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் | Pakistan High Commissioner Meets Sl Prime Minister

அத்துடன் அவ்வாறானதொரு சுற்றுலா அடுத்த ஆண்டு முன் அரைப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் ஏனைய சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றமை மற்றும் உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாகிஸ்தான் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமைக்காக பாகிஸ்தான் தூதுவருக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு! திகதி அறிவிப்பு

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு! திகதி அறிவிப்பு


உறுதியளித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு பாகிஸ்தான் தொழில் முயற்சியாளர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதுடன் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு இதணை கொண்டு செல்வதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் | Pakistan High Commissioner Meets Sl Prime Minister

மேலும் இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் தமக்கு வழங்கிய சிறந்த ஒத்துழைப்புக்காக பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இது அமெரிக்காவினுடைய போர்! இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

இது அமெரிக்காவினுடைய போர்! இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021