பாகிஸ்தானில் விழுந்து நெருங்கியது இராணுவ உலங்குவானூர்தி : பயணித்த அனைவரும் பலி
பாகிஸ்தான் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத் அருகே நிகழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி விபத்தில், அதில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக அந்நாட்டின் முப்படைகளின் மக்கள் தொடர்புத் துறை (ISPR) தெரிவித்துள்ளது.
"தொழில்நுட்பக் கோளாறு காரணமாக" இராணுவ விமானப் படையின் Mi-17 உலங்குவானூர்தி ஒன்று புறப்படும்போது விபத்துக்குள்ளானதாக ISPR ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை.
உலங்குவானூர்தியில் இருந்த அனைத்து வீரர்களும் வீரமரணம்
"உலங்குவானூர்தியில் இருந்த அனைத்து வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். யாரும் உயிர் தப்பவில்லை," என்று ஐ.எஸ்.பி.ஆர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடைபெற்ற பகுதிக்கு உடனடியாக விரைந்த மீட்புப் படையினர் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்துடன், இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவராத நிலையில், தனிக்குழுக்கள் அமைத்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 19 மணி நேரம் முன்