நாங்கள் பாவிகள் என கதறிய பாகிஸ்தான் எம்.பி : வைரலாகும் காணொளி
நாங்கள் பாவிகள் தவறு செய்து விட்டோம் என பாகிஸ்தான் (Pakistan) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுகும் காணொளியொன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
பாகிஸ்தான் முன்னாள் இராணுவ மேஜரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான தாஹிர் இக்பால் என்பவரின் காணொளியே இவ்வாறு வைரலாகி வருகின்றது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியில், “நாம் பலவீனமாக இருக்கிறோம், இதனால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
வைரலாகும் காணொளி
அல்லாவே, உங்கள் முன் மண்டியிட்டு கேட்டு கொள்கிறோம், எங்களின் நாட்டை காப்பாற்றுங்கள், உங்கள் பிரார்த்தனையால்தான் இந்த நாடு பிறந்தது.
இந்த நாட்டை அல்லாதான் நமக்கு கொடுத்தார் அவரால் மட்டுமே பாதுகாக்க முடியும், தவறு நம்முடையதாக இருக்கலாம்.
நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம், நாங்கள் பாவிகள் ஆனால் எப்போதும் உங்களை பின்பற்றுபவர்கள்.
அல்லாஹ்வின் பொருட்டு எங்கள் மீது கருணை காட்டுங்கள், உங்கள் கருணையின் ஒரு துளியையாவது நீங்கள் தந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இந்த நாட்டை பாதுகாத்து, எங்கள் எதிரிகளை தோற்கடிக்க எங்களுக்கு வலிமை அளிக்குமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
