கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கொட்டாஞ்சேனை (Colombo 13) மாணவி விவகாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் அல்லது ஆசிரியர் வழக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்புப்பட்டு செயலாற்றக் கூடாது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆலோசனை வழங்கியுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்கவினால் (Preethi Inoka Ranasinghe) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ இந்த சம்பவத்தில் பிரதிவாதிகளுக்கு எதிராக உள்ளக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படும்போதே பாதிக்கப்பட்ட மாணவிக்கு மேலும் சிக்கலை ஏற்படாத வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
சிறுவர் பாதுகாப்பு
சிறுவர்கள் தொடர்பில் இடம்பெறும் இதுபோன்ற துஷ்பிரயோகங்கள் குறித்து நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக, அவ்வாறான சம்பவங்கள் குறித்து தகவல்களை மூடிமறைக்காமல் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு விரைந்து அறியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறுதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான காவல்துறை பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்க விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் அந்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் முறையாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இந்த ஒட்டுமொத்த சம்பவத்திவலும் ஏதாவதொரு தரப்பு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளார்களா என்பது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு அமைச்சினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
