குறைந்த வருமானம் கொண்ட கொழும்பு மக்களுக்காக முக்கிய சலுகை!
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தகன மற்றும் அடக்கக் கட்டணங்களை முற்றிலுமாக நீக்குவதற்கு கொழும்பு மாநகர சபைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மேயர் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
அதன்படி, குறித்த முன்மொழிவின் மீது விவாதம் நடத்தப்பட்டுள்ளதுடன், அனைவரும் அதற்கு தங்கள் உடன்பாட்டை தெரிவித்துள்ளனர்.
கட்டணங்கள் நீக்கம்
இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பொரளை, ஜாவத்தை, மாதம்பிட்டிய மற்றும் கிருலப்பனை மயானங்களில் உள்ள கொழும்பு மாநகர சபையின் பகுதிகளுக்கு, கொழும்பு மாநகர சபையால் சேவை செய்யப்படும் தகன மற்றும் அடக்கம் செய்வதற்கான கட்டணங்கள் முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.

இதுவரை, பத்தாயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது, இதன் காரணமாக, குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |