பாகிஸ்தானில் விமான விபத்து - இருவர் உயிரிழப்பு!
Death
Pakistan
Crashed
Plane
By Thavathevan
பாகிஸ்தானின் விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது.
அப்போது எதிர்பாரதவிதமாக அந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் இருந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக, விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆயினும் விமானம் தரையில் விழுந்த போது வேறு எதுவும் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து தொடர்பான காரணத்தைக் கண்டறியுமாறு விசாரணைக் குழுவுக்கு பாகிஸ்தான் விமான படைத் தலைமையம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி