பாகிஸ்தான் தொடருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி
பாகிஸ்தான் (Pakistan) உள்ள குவெட்டா தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா தொடருந்து நிலையத்தில் இன்று (09.11.2024) காலை இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்து
தொடருந்து நிலையத்தின் முன்பதிவு அலுவலகத்தில் தொடருந்து நடைமேடைக்கு வருவதற்கு முன்னதாகவே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவ உதவிக்காக குவெட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தீவிரவாத தாக்குதல்கள்
எனினும், காயமடைந்த பயணிகளில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#UPDATE
— News Vibes of India (@nviTweets) November 9, 2024
At least 25 people have been killed and over 40 have been injured in the #attack by BLA suicide bomber targeting a unit of Pakistan Army at #Quetta #Railway station in #Balochistan.#Hakkal https://t.co/Yp51WIa22d
சமீபகாலமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது தவிர அங்கு பிரிவினைவாத கிளர்ச்சியும் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |