பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலும் அலட்டிக்கொள்ளாத இந்தியாவும்..!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்ப் பதற்றம் ஆரம்பமாகி, பாகிஸ்தானில் உள்ள பயரங்கரவாத இலக்குகள் மீது இந்தியா தாக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகரிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, தங்கள் அணுவாயுதம் கொண்டு தாக்கப்போவதாக எச்சரிக்க ஆரம்பித்திருந்தார்கள் பாகிஸ்தான் தலைவர்கள்.
எந்த ஒரு தரப்பு அணுவாயுதங்கள் பற்றிப் பேச ஆரம்பிக்கின்றதோ- அந்தத் தரப்பு பலவீனமாக இருக்கின்றது என்று அர்த்தம்.
ஒரு மரபு ரீதியிலான யுத்;தத்தில் தன்னால் வெல்லமுடியாது என்று எப்பொழுது ஒரு நாடு நினைக்கின்றதோ அப்பொழுதுதான் அது அணுவாயுதம் பற்றி சிந்திக்கும்.
மரபுரீதியிலான படைப்பலத்தைக்கொண்டு எதிரியை வீழ்திவிடமுடியும் என்ற தற்துணிவு இருக்கின்ற பட்சத்தில், அந்த நாடு அணுவாயுதம் பற்றி வாயே திறக்காது.
அணுவாயுதங்கள் பற்றி பாகிஸ்தான் பேசியது எதனை வெளிப்படுத்திநிற்கின்றது என்பது பற்றியும், இந்திய விமானங்கள் பாகிஸ்தானினால் சுட்டுவீழ்த்தப்பட்டனவா என்பது பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
