சுட்டு வீழ்த்தப்பட்ட 77 இந்திய ட்ரோன்கள்: பாக்.ராணுவம் விடுத்துள்ள சவால்
கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட 77 ட்ரோன்களை பாகிஸ்தான் இதுவரை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி (Ahmed Sharif Chaudhry) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான சவால்
அத்துடன், பாகிஸ்தான் ஏவிய குறைந்தபட்சமாக ஒரு விமானம் அல்லது ட்ரோனின் சிதைவை காட்ட வேண்டும் என இந்திய அதிகாரிகளுக்கு அவர் சவால் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பல இடங்களில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்களில் மொத்தம் 33 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் 76 பேர் காயமடைந்துள்ளதாகவும் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள்
அவர்களில் ஏழு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் அடங்குவதாகவும் ஏழு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் 62 பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் இராணுவ தரப்பில் எந்த உயிரிழப்பு பதிவாகவில்லை என்றும், 14 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரிப் சவுத்ரி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
