இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் மர்ம மரணம்
பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதி தளபதிகளில் ஒருவரான ஷேக் ஜமீல் உர் ரஹ்மான் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தொடர்புடைய ஜமீலை இந்திய அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் தீவிரவாதியாக அறிவித்திருந்தது.
அத்தோடு காஷ்மீரின் பல்வாமாவை சேர்ந்த இவர் ஐக்கிய ஷிகாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் மற்றும் தவ்ரீக் உல் முஜாகிதீன் அமைப்பு தலைவராக செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மர்மமான மரணம்
இந்நிலையில், பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள அபோதாபாத்தில் இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேவேளை, ஜமீல் உர் ரஹ்மான் பாகிஸ்தானில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததுடன் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து உறுதியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த நவம்பர் மாதம் லஷ்கர் இ தொய்பா தளபதி அக்ரம், டிசம்பர் மாதம் கராச்சியில் லஷ்கர் தீவிரவாதி அபு ஹன்சலா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் நேற்று முன்தினம் லஷ்கர் உளவுத்துறை தலைவர் அசாம் சீமா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.