பேரிடரில் சிக்கிய பாகிஸ்தான் - இதுவரை 27 பேர் பலி!
பாகிஸ்தானில் கனமழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 8 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 27 பேரில் 8 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பேரழிவு

சனிக்கிழமையன்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் புயல் பேரழிவை ஏற்படுத்தியது. நான்கு மாவட்டங்களில் அவசர நிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், 200 கால்நடைகள் இறந்ததாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தைமூர் அலி கான் தெரிவித்தார்.
மழையில் பல வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பங்கள் சாய்ந்தன. தற்போதைய சூழ்நிலையில் மீட்பு பணி மிகவும் கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#NEOC Update:Very Severe Cyclonic Storm #BIPARJOY status.
— NDMA PAKISTAN (@ndmapk) June 11, 2023
Dev path based on intl weather models is for proactive measures against likely impacts. It's evolving sit & impact will only be certain w/ further devplt of sys.
Source:Windy (UKM,BoM-A, ECMWF model)?11June,0900hrs PST pic.twitter.com/SMD9c6cnmg