மீண்டும் ஈரான் பறக்கிறார் பாகிஸ்தான் இராணுவத்தளபதி
Pakistan
Iran
Iran-US Conflict
By Jaso
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் மத்தியஸ்த முயற்சிகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் இன்று(21)வியாழக்கிழமை தெஹ்ரான் பயணம் மேற்கொள்ள உள்ளார் என ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான ஐஎஸ்என்ஏ (ISNA) தெரிவித்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே இஸ்லாமாபாத் தனது மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்வதால், முனீர், ஈரானின் மூத்த அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஈரானில்
ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் ஈரானுக்கு தனது இரண்டாவது பயணமாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி புதன்கிழமை தெஹ்ரான் வந்தடைந்தார் என ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) செய்தி வெளியிட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி