பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் இவர்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான புதிய தலைவராக முகமது ரிஸ்வான்(Mohammad Rizwan) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று (27) அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சல்மான் அலி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா ஒருநாள் போட்டி
பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் ஆரம்பமாக உள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் தலைவராக செயல்படவுள்ளார்.
— Pakistan Cricket (@TheRealPCB) October 27, 2024
புதிய தலைவர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அணியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்ட ஷாகின் ஷா அஃப்ரிடி மற்றும் பாபர் அசாம் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய தலைவரான 32 வயதுடைய முகமது ரிஸ்வான் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 74 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 5,401 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |