இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம் : துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்து
Turkey
Palestine
Recep Tayyip Erdoğan
Israel-Hamas War
By Beulah
a year ago
இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம், அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டதுர்க் விமான நிலையத்தில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் கூடி பலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
துருக்கி உங்களுக்கு கடன் பட்டிருக்கவில்லை
“நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? நீங்கள் ஒரு ஆக்கிரமிப்பாளர்கள், மேற்கத்திய நாடுகள் உங்களுக்கு கடன்பட்டு இருக்கலாம், ஆனால் துருக்கி உங்களுக்கு கடன் பட்டிருக்கவில்லை.
மேற்கத்திய நாடுகளே, உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்! சிலுவைக்கும், பிறை நிலாவுக்கு இந்த சண்டை வேண்டுமா என்று?
லிபியாவில், கராபாக்கில் எப்படி இருந்தோமோ அப்படியே மத்திய கிழக்கிலும் நாங்கள் இருப்போம்.” என்றார்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி