போருக்கு மத்தியிலும் ரமலானை வரவேற்கத் தயாரான காசா மக்கள்!
Ramadan
Joe Biden
United States of America
Israel-Hamas War
Gaza
By Kathirpriya
முடிவின்றித் தொடரும் போருக்கு மத்தியில் புனித ரமலான் நோன்புப் பண்டிகையை வரவேற்க பாலஸ்தீனிய மக்கள் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் நோன்பு இன்று (11) ஆரம்பமாகி உலகிலுள்ள அனைத்து இஸலாமியர்களாலும் இந்த பண்டிகைக்கான நோன்பு அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ள நிலையில் பலஸ்தீனியர்கள் போருக்கு மத்தியிலும் ரமலான் நோன்பை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் பஞ்சம் ஏற்பட்டு மிகப் பெரிய உயிரிழப்பு ஏற்படும் என்று ஐ.நா. தொடா்ந்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில், காசாவுக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக அதன் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு தனது இராணுவத்திடம் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.
தற்காலிக துறைமுகம்
காசாவிற்குள் விமானத்திலிருந்தபடி பரசூட் மூலம் நிவாரணப் பொருள்களை வீசி வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கடல்வழியாகவும் அந்தக் பகுதிக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வது குறித்து பரிசீலித்து வருகின்றனா்.
அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காசாவின் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு இராணுவத்துக்கு அதிபா் பைடன் உத்தரவிட்டுள்ளாா்.
காசாவின் ரபா நகரில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான பலஸ்தீனியர்கள், பிளாஸ்டிக் கூடாரங்களின் கீழ் வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அங்குள்ள கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு தொழுகை
ரமலான் நோன்பு தொடங்குவதற்கு முன்பிலிருந்தே, கடந்த 5 மாதங்களாக போதிய உணவின்றி பட்டினி கிடக்கிறோம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும், ராபாவில் ரமலானையொட்டி சிறப்பு தொழுகை நடத்தி ரமலான் பண்டிகையை வரவேற்க காசா மக்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி