பாணந்துறை துப்பாக்கிப் பிரயோகம்! சந்தேக நபர் ஒருவர் கைது
Police
Sri Lanka
Arrest
Ajith Rohana
By Vasanth
பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் நபரொருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்கேகநபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

