ஆண்களின் ஜிம் பையில் வைக்க மறக்ககூடாத பத்து பொருட்கள்: என்ன தெரியுமா !
Israel
Syria
World
By Shalini Balachandran
உடல் கட்டமைப்பை மெருகேற்றுவதற்காகவும் மற்றும் ஆரோக்கியமான கட்டுகோப்பான உடல் அமைப்பை பெறுவதற்காகவும் தற்போது ஆண்கள் ஜிம்மிற்கு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் அவர்கள் ஜிம்மிற்கு எடுத்து செல்லும் பையில் தவறவிடாமல் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயமான பொருட்கள் தொடர்பில் அவர்கள் தெரிந்து வைத்திருப்பதும் அவசியமான ஒன்றாகும்.
இவ்வாறு, அவர்கள் ஜிம்மிற்கு எடுத்து செல்லும் பையில் கட்டாயம் உள்ளடங்க வேண்டிய பத்து பொருட்கள் தொடர்பில் இப்பதிவில் விரிவாக காணலாம்.
🛑 ஜிம்மில் பயன்படுத்தும் துடைக்கும் துணிகள்
- ஜிம்மில் துடைக்க துணிகள் கண்டிப்பாக அவசியமானது.
- ஏனெனில் மற்றவர்கள் தங்கள் வியர்வையை துடைக்க பயன்படுத்திய பொதுவான துணியை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது கிடையாது.
🛑 டியோடரண்ட்
- இது கண்டிப்பாக முக்கியமான ஒரு பொருளாகும்.
- ஆனால் ஜிம்மை விட்டு வெளியேறும் பல ஆண்கள் அப்படி செய்வதில்லை.
- என்ன புரியவில்லையா ? அவர்கள் எல்லாம் உடற்பயிற்சி செய்த பின் குளித்து விட்டு தான் வெளியேறுவார்கள்.
- அவசர வேலை இருந்தால் தவிர, மற்ற நேரங்களில் குளிக்காமல் வெளியேறுவது நல்லதல்ல.
- மேலும் அப்படி அவசரமாக வெளியேறும் போது டியோடரண்டை பயன்படுத்துங்கள்.
🛑 ஸ்நாக்ஸ்
- அலுவலகத்தில் இருந்து நேராக ஜிம்மிற்கு ஓட வேண்டிய நாட்கள் ஏற்படலாம் அல்லது கடுமையான உடற்பயிற்சியால் சோர்வடையலாம்.
- அதனால் உடலில் தெம்பை ஏற்றுவதற்கு, எப்போதும் ஜிம் பைகளில் ஸ்நாக்ஸ்களை வைத்திருங்கள்.
🛑 சவரம் செய்ய கூடுதலாக ஒரு பெட்டி
- ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பின் அங்குள்ள பாதுகாப்பு அறையில் செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபடாமல் நேராக வீட்டிற்கு செல்பவராக இருந்தால் சவரத்தை பற்றிய முன் ஏற்பாடு தேவையில்லை.
- ஆனால் அப்படி இல்லையென்றால், எப்போதும் அடிப்படை கருவிகளை கொண்ட ஒரு சவரப்பெட்டியை உடன் வைத்திருப்பது நல்லது.
- ஒரு வேலை த்ரெட்மில்லில் நடந்த பின் நேராக அலுவலகத்துக்கு செல்ல வேண்டுமானால் அங்கேயே சவரம் செய்து குளித்து விட்டு செல்லலாம்.
🛑 வலியை நீக்கும் க்ரீம்
- வலியை போக்கும் க்ரீம்களில் மென்தால் இருப்பதால் அது தசை மற்றும் மூட்டு வலிகளுக்கும் நிவாரணியாக விளங்கும்.
- அதிலும் பாதுகாப்பை கருதி உடற்பயிற்சி செய்யும் முன்பாகவே அதை பயன்படுத்தலாம்
- அல்லது உடற்பயிற்சி செய்த பின் வலியை நீக்கவும் அதை பயன்படுத்தலாம்.
- மேலும் தசையில் ஏற்படும் அயர்ச்சியை போக்கவும் இதனை பயன்படுத்தலாம்.
🛑 இசை கருவி
- உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இசை அதிக திறனை அளித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
- ஆகவே அதிவேக தாளத்துடன் கூடிய பாட்டுக்களை எம்.பி.3 கருவியில் நிறைத்து ஜிம் பையில் வைத்திடுங்கள்.
- அது ஊக்கத்தை அளிக்க தவறுவதில்லை. இந்த இசைக்கருவி சின்னதாக அடக்கமாக இருப்பது நல்லது.
🛑 கையை கழுவும் சானிடைசர்
- ஜிம் போன்ற இடங்களில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- அதனால் ஏதாவது சிறிய சானிடைசரை எப்போதும்ஜிம் பையில் வைத்திருங்கள்.
- தேவையான போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
🛑 எண்ணெயில்லா ஃபேஸ் வாஷ்
- உடற்பயிற்சியில் ஈடுபடும் போது வியர்வை கொட்டுவது என்பது பொதுவான ஒன்றே.
- உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் வியர்வையினால் முகப்பரு ஏற்படாமல் இருக்க சாலிசிலிக் அமிலம் உள்ள எண்ணெயில்லா ஃபேஸ் வாஷை பயன்படுத்தி அழுக்கை நீக்குங்கள்.
🛑 தண்ணீர் பாட்டில்
- பல வகையான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
- எனவே பையில் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருந்தால் சோர்வுடன் இருக்கும் நேரத்தில் தண்ணீரை தேடி அலையாமல் பையில் இருப்பதை உடனடியாக பருகலாம்.
- ஒருவேளை ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் கூட தண்ணீர் பருகுவதில் எந்த வித தீமையும் இல்லையல்லவா ?
🛑 மாற்று உடைகள்
- மற்ற ஜிம் உறுப்பினர்கள் மத்தியில் அலங்கோலமாக காட்சி அளித்தால் பரவாயில்லை என்றால் எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை.
- ஆனால் அப்படி இல்லையென்றால் மாற்று உடைகளை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
- ஜிம்மில் இருந்து வீட்டிற்கு நேராக சென்றாலும் கூட உடையை மாற்றி விட்டு செல்வது தான் நல்லது.
- அப்படி இல்லையென்றால் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் ஆடை வியர்வையில் ஊறி பாழாகிவிடும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

