யாழ் துப்பாக்கிச் சூடு: சட்டரீதியாக சிறுவன் தான் - பொய்யுரைக்கும் தரப்பு எது...!
அல்லைப்பிட்டியில் காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்திய போது சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளன.
காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
நேற்று காவல்துறை ஊடக அறிக்கையில் அந்த சிறுவனின் வயது 19 வயது என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.
வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர்
காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல்துறையினர் வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அது தொடர்பில் 10ஆம் திகதி காவல்துறையினர் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதியே பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 21 மணி நேரம் முன்