ஆலயங்களை கட்டுவதில் காட்டும் அக்கறை கூட, தாம் கற்ற பாடசாலைகளில் காட்டுவதில்லை - கந்தையா பாஸ்கரன்
“இங்கே இருந்து சென்றவர்கள் ஆலயங்களை கட்டுவதில் காட்டும் அக்கறை கூட, தாம் கல்வி கற்ற பாடசாலைகளில் காட்டுவதில்லை” என பிரபல தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
பாடசாலை நாட்கள் என்பது மிகவும் சொர்ப்ப நாட்களே. அதை நாங்கள் எவ்வளவு தூரம் அனுபவித்து அந்தக் கல்வியில் முன்னேறுகிறோம் என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், தான் கற்ற பாடசாலைக்கு அளவிட முடியாத பெரும் உதவிகளை வழங்கி வருகிறார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், தான் பாடசாலையில் கடந்து வந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், தனக்கு கற்பித்த ஆசிரியர்கள், தன்னுடன் பயின்ற சக தோழர்களை நினைவுபடுத்தியதுடன், அங்கு கற்கும் மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் கருத்துக்களை வழங்கியிருந்தார்.
