நாட்டு மக்களுக்கு தொற்றுநோய் குறித்து விசேட எச்சரிக்கை
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dharu
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நீர் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் நெல் வயல்களுக்கு அருகில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது சரியான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சங்கச் செயலாளர் சமில் முத்துக்குடா பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
நுளம்பு பெருக்கம்
தற்போதைய மழைக்காலங்களில் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கவும், நோய் அபாயத்தைக் குறைக்கவும் தண்ணீரைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி