வெளிநாடொன்றில் சிறையிலிருந்த இலங்கையர்கள் விடுதலை
Sri Lanka
United Arab Emirates
Prison
By Sumithiran
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்த 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த வார இறுதியில் விடுவிக்கப்பட்டு ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்தின் செலவில் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் 52வது தேசிய தினமான டிசம்பர் 2ஆம் திகதியன்று, அரச ஆணை மூலம் இந்த இலங்கைக் கைதிகள் மன்னிக்கப்பட்டதாக அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |