வாகன பார்க்கிங் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
வாகனம் ஒன்றை நிறுத்திய(Parking ticket fees) உடனே கட்டணம் வசூலிக்க எந்த சட்டமும் இல்லை என கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணாயக்கார( Palitha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“வாகனத்தை நிறுத்திய முதல் 10 நிமிடங்கள் இலவசம்.
பார்க்கிங் கட்டணம்
வாகனம் நிறுத்தப்பட்டவுடன் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. வாகனம் நிறுத்தப்படும் நேரத்தை குறிப்பிட்டு டிக்கெட்(Parking Ticket) ஒன்றை வழங்க முடியும்.
பத்து நிமிடங்களுக்கு மேல் சென்றால்தான், குறித்த நபரிடம் இருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணம் பெற முடியாது.
மேலும், போயா நாட்களிலும் சிறப்பு விடுமுறை நாட்களிலும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை." என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)