அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இரவே நாடாளுமன்றம் கலைக்கப்படும்: அனுர சூளுரை
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அன்றைய தினம் இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன், தற்போது தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நிலைமைகள் வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல்
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பொதுத் தேர்தலில் தமது கட்சி 120-130 இடங்களைப் பெறும் எனவும் அனுர குமார வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, , நாடாளுமன்றத்தில் இருக்கும் தனது மூன்று அமைச்சர்களும் நூற்றி இருபது அல்லது நூற்று முப்பது என்ற எல்லையை எட்டுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |