பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவர் அமர்ந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ரமேஷ் பத்திரன (நேரலை)
மூன்றாம் இணைப்பு
இன,மத, சாதீய பேதங்கள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமாயின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமரும் போது அதனை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் நடந்த போராட்டம் நாட்டின் அரச தலைவரை மாற்றியது. அந்த போராட்டத்தில் நன்மையான பல விடயங்கள் இருந்தன.
21 ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தும் வகையில் இந்த நாட்டில் இன, மத, சாதீய பேதங்கள் இன்றி மக்கள் ஒன்றிணைந்திருந்தமை போராட்டத்தின் பிரதான அடையாளம் இருந்தது. மிகவும் மகிழ்ச்சி.
நாம் 21 ஆம் நூற்றாண்டை நோக்கி செல்ல வேண்டியது அவசியம். நாட்டில் இன,மத, சாதிய வாதங்களுடன் முன்நோக்கி செல்ல முடியாது. இன,மத, சாதி வேறுபாடுகள் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டுமாயின் நாம் எமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
குறைந்தது எமது நாட்டின் பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவர் அமரும் போது மன மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். எனவும் தெரிவித்தார்
இரண்டாம் இணைப்பு
இந்த நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பினை வழங்குங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பக்கம் தான் இருப்பதாகவும், மக்களது போராட்டம் உலகத்துக்கு முன்னுதாரணமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த மக்கள் எழுச்சி போராட்டங்களின் போது இடம் பெற்ற வன்முறை சம்பவங்களை தான் கண்டிப்பாதாகவும் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
[10.04
நாட்டில் நிலவில் அரசியல் பொருளாதர நெருக்கடிக்கு மத்தியிலும் இன்று நாடாளுமன்றம் கூடியுள்ளது.
சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு நேரலை