தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா

Sri Lanka Government Of India China China Ship In Sri Lanka
By Kiruththikan Aug 10, 2022 05:07 AM GMT
Report
125 Shares

யுவான் வாங் 05

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் மூன்றாம் தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும், அணிசேராக் கொள்கையின்படி தனக்கு விருப்பமான எந்த நாட்டையும் கையாள்வதற்கு இலங்கைக்கு உரிமை உண்டு என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் யுவான் வாங் 05 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை தாமதப்படுத்துமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் சீனா இதனைத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகளைப் பேண அனுமதிக்க வேண்டும் 

தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா | China Asks India To Stop Disturbing In Sri Lanka

இலங்கை இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், தேவையான வெளிநாட்டு உறவுகளைப் பேண அனுமதிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடக் கூடாது எனவும் சீனா எச்சரித்ததுள்ளது.

இந்த சீன கப்பல் இலங்கைக்கு செல்வதற்கு ஆரம்பம் முதலே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த கப்பல் விவகாரம் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் வியாழக்கிழமை(11) காலை 09.30 மணியளவில் யுவான் வாங் 05 கப்பல் ஹம்பாந்தோட்டையை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி 

பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை..! நெருக்கடிக்குள்ளான சீனக்கப்பல் விவகாரம்

கோரிக்கைகள் புறக்கணிப்பு - ஹம்பாந்தோட்டையை நோக்கி வேகமாக நகரும் சீன கப்பல்

சூடுபிடிக்கும் சீன கப்பல் விவகாரம்..! பின்னணியில் பசில்: ரணிலுக்கு அழுத்தம்


YOU MAY LIKE THIS 



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்