கோரிக்கைகள் புறக்கணிப்பு - ஹம்பாந்தோட்டையை நோக்கி வேகமாக நகரும் சீன கப்பல்
இலங்கை நோக்கி வேகமாக நகரும் சீன கப்பல்
இந்தக் கப்பல் தற்போது இந்தோனேசியாவின் கடற்பரப்பில் இருந்து இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாக இந்தியாவின் என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையை சென்றடையும்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைவதற்காக இந்த கப்பல் நிலைநிறுத்தப்பட்டு வருவதாகவும், அது வியாழக்கிழமை காலை 09.30 மணியளவில் ஹம்பாந்தோட்டையை சென்றடையும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்க முடியுமான வசதிகள் கொண்ட இந்த கப்பல் இன்று பிற்பகல் இலங்கையில் இருந்து 680 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தது. மணித்தியாலத்திற்கு 14 கடல் மைல் வேகத்தில் அந்நேரத்தில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. இதற்கு முன்னர் இந்த கப்பல் மணித்தியாலத்திற்கு 10 முதல் 13 கடல் மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.
இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக சீனா ஜூன் 28 ஆம் திகதி அறிவித்ததுடன், ஜூலை 12 ஆம் திகதி இலங்கை வௌிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, ஜூலை 14 ஆம் திகதி இந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
கோரிக்கை மற்றும் ஆட்சேபனை புறக்கணிப்பு
ஆனால், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும், அணிசேராக் கொள்கையின்படி தனக்கு விருப்பமான எந்த நாட்டையும் கையாள்வதற்கு இலங்கைக்கு உரிமை உண்டு என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.