இது சாதாரண கப்பல் அல்ல! சீனாவின் பெரும்திட்டம் - மீறினால் இந்தியக் கப்பல் திருகோணமலைக்கு..! சேனனின் பரபரப்பு தகவல்
சீன ஆய்வுக்கப்பல் இலங்கையில் தரித்து நிற்குமானால், அதன் தொடர்ச்சி இருக்குமானால் இந்தியக் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என எழுத்தாளர் சேனன் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்தியா இதனை ஏற்காது எனவும், இந்த விடயம் முற்கூட்டியே இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
உலகத்திலேயே மிகப்பலம் வாய்ந்த கடற்படையை சீனாவே வைத்திருக்கிறது. இதற்கு புதிய வகையான இராணுவ சிந்தனைகள், கடற்கல உற்பத்திகள், போதிய ஆளணி போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.
சீனா ஆய்வுக்கப்பலை அனுப்புகிறது
எதற்கு சீனா ஆய்வுக்கப்பலை அனுப்புகிறது? எனும் கேள்விக்கு இந்திய உளவுத்துறை இப்படியான பதில்களை கூறியுள்ளது.
இது சாதாரண ஆய்வுக்கப்பல் இல்லை. இந்தியாவில், குறிப்பாக தென் பகுதியில் உள்ள இராணுவ தளங்கள், அணு உற்பத்தி சார்ந்த தளங்களின் தகவல்களை மிகத்துல்லியமாக எடுக்கக்கூடிய கப்பல் இது. அவர்களின் பதில்களில் நியாயம் உள்ளது.
இது பூகோள அரசியலில் மிக முக்கிய கட்டம். தாய்வான் விவகாரத்தில் சீனா நடந்து கொள்வது போலவே ஹம்பாந்தோட்டை விவகாரம் அமைந்துள்ளது.
இலங்கை வரவுள்ள சீனக் கப்பலின் பலம் - பலவீனம், இந்த விடயத்தில் சீன, இந்திய, இலங்கை நிலைப்பாடு, சமகால அரசியல் விடயதானங்கள் தொடர்பில் அவர் தெரிவிப்பவை காணொளி வடிவில்,