இலங்கைக்கான பயணத்தை தொடங்கியது சீன ஆய்வுக்கப்பல்
பயணத்தை ஆரம்பித்தது சீன கப்பல்
சீன ஆய்வுக்கப்பல் இலங்கையை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இக்கப்பல் எதிர்வரும் 11 அல்லது 12-ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்து சேரும் என தெரிகிறது. 17-ம் திகதி வரை இக்கப்பல் இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் உன்னிப்பான அவதானம்
இதேவேளை இந்த விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதேசமயம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தாய்வானை சுற்றி சீனா தனது படைகளை குவித்து வைத்து இருக்கும் நிலையில் தற்போது இந்தியாவை உளவு பார்க்க கப்பலை இலங்கைக்கு அனுப்பி உள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்