தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள் தொடரப்படுகின்றன..! நாடாளுமன்றில் செல்வம் பகிரங்கம் (நேரலை)
புதிய இணைப்பு
விடுவிக்கப்படும் நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள் தொடரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கல நாதன் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " இன்றும் சில அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதாக அறியக்கிடைத்தது. அதிபர் ரணில் விக்ரமசிங்க தமது கொள்கை பிரகடன உரையில், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுவிப்பு குறித்து தெரிவித்திருந்தார்.
அதற்கு பிந்திய எமது சந்திப்பிலும் அதனை அவர் உறுதி செய்திருந்தார். அரசியல் கைதிகளை விடுவிக்க ஆர்வமும் அவரிடத்தில் இருந்தது.
எவ்வாறாயினும், வழக்கு தீர்க்கப்பட்டு பொதுமன்னிப்பில் அவர்களை விடுதலை செய்யக்கூடிய இயலுமை காணப்படுகின்ற போதிலும், அவர்கள் மீது புதிய வழக்குகள் தொடரப்படுகின்றன.
கடந்த வாரத்தில் பலர் மீது இவ்வாறான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இது அரசியல் கைதிகள் விடயத்தில் மீண்டும் ஏமாற்றம் ஏற்படுமா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
இவர்கள் சிறையிலேயே மரணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான வழக்குகள் தொடரப்படுகின்றனவா என்ற ஐயங்களும் தோற்றுகின்றன. எனவே, இது குறித்து அதிபர் உரிய அவதானம் செலுத்த வேண்டும்", எனக் குரிப்பிட்டர்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு இன்று (08) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
