நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்கட்சிக்கு இடையில் சூடு பிடிக்கும் வாதப்பிரதிவாதங்கள் (நேரலை)
இலங்கையின் நாடாளுமன்றத்தில் இன்று சிங்கள நடிகை தமித்தா அபேரத்ன தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்கட்சிக்கு இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிங்கள நடிகை தமிதா அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியபோதே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது இந்த விடயத்தில் சபாநாயகர், தலையீடு செய்த நடிகை தமித்தா அபேரத்னவை விடுதலை செய்யவேண்டும் என்று சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி
அரசாங்கத்துக்கு கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்களை ஏன் பிடிக்கவில்லை என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
சஜித் பிரேமதாச இதனை கூறிக்கொண்டிருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கோசம் எழுப்பியதை அடுத்து, அவரை நோக்கியும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினர்.
அலரிமாளிகையிலேயே வன்முறை ஆரம்பித்தது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர், நீதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இடம்தரப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதில் எதிர்கட்சி தலைவரோ, தாமோ முடிவெடுக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார் இதனையடுத்து கருத்துரைத்த சஜித் பிரேமதாச, வன்முறையாளர்கள் யார் என்பது ஹம்பாந்தோட்டை மக்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினையை உள்நாட்டிலேயே தீர்க்கவேண்டும் என்றும் ஜெனீவாவில் தீர்க்கப்படக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
