நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தியின் மரணம்!! - கேள்வியெழுப்பிய நாமல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான ஆரம்பக் கூற்றுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையின் போது அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையிலேயே, அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “மாண்புமிகு எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது வைத்திய பரிசோதனையில் அது வேறுவிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு.
