22ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதம்
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (10) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை அன்றைய தினங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
இதேவேளை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்காத நிலையில், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி எவ்வாறு பகிரங்கமாகக் கூற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவலைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து நீதி அமைச்சர் அந்த சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |