உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதம்

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena Sri Lanka Easter Attack Sri Lanka
By Sathangani Sep 09, 2023 10:56 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் முழுநாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (08) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், 19 மற்றும் 20ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆட்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2334/47ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சனல்-4 காணொளி: சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சனல்-4 காணொளி: சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

நாடாளுமன்ற விவாதம்

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை (451ஆம் அத்தியாயமான) காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2346/02ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் | Parliamentary Debate On Easter Sunday Bombing

செப்டெம்பர் 21ஆம் திகதி மற்றும் 22ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான முழுநாள் விவாதம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இலங்கைக்கு இறுகும் நெருக்கடி : ஜெனிவாவில் இருந்து வெளியான அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இலங்கைக்கு இறுகும் நெருக்கடி : ஜெனிவாவில் இருந்து வெளியான அறிவிப்பு



ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025